ரஜினிகாந்தின் 2.0 டீசர் : கலக்கல் வீடியோ

வியாழன், 13 செப்டம்பர் 2018 (09:12 IST)
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

 
கடந்த 4 வருடங்களாக தயாரிப்பில் இருந்த 2.0 படத்தின் டீசர் இன்று வெளியிடப்படும் என இயக்குனர் ஷங்கர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
 
இணையதளத்தில் 2D யில் வெளியான அதே நேரத்தில் சில திரையரங்குகளில் 3D யிலும் இந்த டீசர் வெளியானது. இப்படம் 542 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் 29ம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
 
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் 2.0. இதில் பிரபல பாலிவுட் ஹீரோ அக்ஷயகுமார் வில்லனாக நடித்துள்ளார். இதனால் தென்னிந்தியாவை தாண்டி இந்தியா முழுவதும் 2.0 படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில் பிக்பாஸ்: ஐஸ்வர்யா பற்றி ஓவியா போட்ட முதல் ட்விட்