Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொங்கல் ரேஸில் இருந்து தங்கலான் வெளியேறக் காரணம் என்ன?

பொங்கல் ரேஸில் இருந்து தங்கலான் வெளியேறக் காரணம் என்ன?
, சனி, 28 அக்டோபர் 2023 (07:50 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி தங்கலான் படத்தின் டீசர் வெளியாகும் என்றும் படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 26 ஆம் தேதி என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் தங்கலான் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தங்கலான் பேன் இந்தியா படமாக ரிலீஸ் ஆவதாலும், மற்ற மொழிகளில் அந்த தேதிகளில் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவதாலும் ஜனவரி 26 ஆம் தேதிக்கு ரிலீஸை தள்ளிவைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி 68 படத்தில் விஜய்க்கு தங்கையாக பிரபல ஹீரோயின்!