Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்யின் கடைசி படத்தை இயக்கப் போவது… ரசிகர்கள் ஆர்வம்!

விஜய்யின் கடைசி படத்தை இயக்கப் போவது… ரசிகர்கள் ஆர்வம்!

vinoth

, சனி, 3 பிப்ரவரி 2024 (07:10 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், நேற்று தன்னுடைய அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளது.

இது சம்மந்தமான அறிவிப்பில் தான் ஏற்கனவே ஒத்துக்கொண்ட இன்னும் ஒரு படத்தை மட்டும் நடித்து முடித்துவிட்டு அதன் பின்னர் முழுமையாக மக்கள் சேவைக்கு வரவுள்ளதாகக் கூறியிருந்தார். இப்போது The GOAT திரைப்படத்தில் நடித்து வரும் விஜய், இதன் பின்னர் தனது 69 ஆவது படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

69 ஆவது படத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போடும் விஜய், அந்த படத்தில் யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பட்டியலில் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் அட்லி ஆகியோரின் பெயர் பரிசீலணையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய்யின் கடைசி படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்பது ரசிகர்களின் ஆர்வமாக உள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Hangover மாதிரியான படங்களில் நடிக்க ஆசை- ஹிருத்திக் ரோசன்