Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் பெயர் என்ன தெரியுமா?

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் பெயர் என்ன தெரியுமா?
, வியாழன், 14 டிசம்பர் 2017 (13:01 IST)
சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டிக் டிக் டிக்’. முதல் இந்திய விண்வெளிப் படமான இதில், ஜெயம் ரவி ஹீரோவாகவும், நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். ஜெயம் ரவியின் மகன் ஆரவ், முக்கிய கேரக்டரில்   நடித்துள்ளார்.
இந்நிலையில் 'டிக் டிக் டிக்' படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் படத்திற்கு 'அடங்க மறு' என டைட்டில்  வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சரணிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கார்த்திக் தங்கவேல், இந்தப் படத்தின் மூலம்  இயக்குநராக அறிமுகமாகிறார். ஜெயம் ரவியின் 24-வது படமான இதில், ராஷி கண்ணா நாயகியாக நடிக்க உள்ளார்.
 
இப்படம் பூஜையுடன் நேற்று தொடங்கியுள்ளது. ஆண்டனி ரூபன் படத்தின் எடிட்டராகவும், சத்யன் சூர்யன் ஒளிப்பதிவாளராகவும்,  'விக்ரம் வேதா' படத்திற்கு இசையமைத்த சாம் சி.எஸ் இந்தப் படத்தின் இசையமைபாளராகப் பணியாற்றுகிறார்கள். இந்த படத்திற்குப் பிறகு சுந்தர்.சி இயக்கும் 'சங்கமித்ரா' படத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருப்பதாகவும்  கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் 7 படங்கள் ரிலீஸ்; ஏன் தெரியுமா?