Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

6 மணி நேரத்தில் 15 லட்சம் பார்வையாளர்கள், 1.5 லட்சம் லைக்ஸ்: விவேகம் டீசர் சாதனை

6 மணி நேரத்தில் 15 லட்சம் பார்வையாளர்கள், 1.5 லட்சம் லைக்ஸ்: விவேகம் டீசர் சாதனை
, வியாழன், 11 மே 2017 (06:41 IST)
தல அஜித்தின் அட்டகாசமான 'விவேகம்' டீசர் நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் புயலை கிளப்பிய நிலையில் இந்த டீசருக்கு 6 மணி நேரத்தில் 15 லட்சம் பார்வையாளர்களும் 1.5 லட்சம் லைக்ஸ்களும் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.



விவேகம் டீசர் ஒவ்வொரு வினாடிக்கும் 7 லைக்ஸ்கள் கிடைத்து கொண்டிருப்பதாகவும், அதேபோல் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 3223 பார்வையாளர்கள் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. யூடியூப் வரலாற்றில் இவ்வளவு வேகமாக பார்வையாளர்கள் மற்றும் லைக்ஸ்கள் அதிகரிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதே ரீதியில் லைக்ஸ்களும், பார்வையாளர்களின் எண்ணிக்கையிலும் அதிகரித்து கொண்டே வந்தால் 'விவேகம்' டீசர் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறதூ.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'ஸ்பைடர்' ரிலீஸ் தேதி திடீர் தள்ளி வைப்பு ஏன்?