Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயக்குனரைக் காக்க வைத்து கழட்டிவிட்ட விஷால்… கைகொடுத்த அருண் விஜய்!

இயக்குனரைக் காக்க வைத்து கழட்டிவிட்ட விஷால்… கைகொடுத்த அருண் விஜய்!

vinoth

, வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (08:50 IST)
பல வருடங்களாக போராடி வந்த அருண் விஜய்க்கு என்னை அறிந்தால் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அதற்கடுத்து தடையற தாக்க மற்றும் தடம் போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக கொடுத்து இப்போது முன்னணி நடிகராகியுள்ளார். சமீபத்தில் பாலா இயக்கத்தில் உருவாகும் வணங்கான் படத்தின் ஷூட்டிங்கை முடித்தார்.

இதையடுத்து அவர் மான் கராத்தே மற்றும் கெத்து ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் திருக்குமரன் (க்ரிஷ் திருக்குமரன்) இயக்கத்தில் ரெட்ட தல என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை பிடிஜி யூனிவர்சல் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் தன்யா ரவிச்சந்திரன் மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சாம் சி எஸ் இசையமைக்கிறார்.   இப்போது படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தை இயக்குனர் திருக்குமரன் முதலில் விஷாலை வைத்துதான் இயக்க இருந்தாராம். அதற்காக பேச்சுவார்த்தை நடந்து திரைக்கதை அமைக்கும் பணிகளும் நடந்துள்ளன. ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விஷால் வெளியேறிவிடவே இப்போது அருண் விஜய் உள்ளே வந்துள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியன் 2 ரிலீஸுக்கு முன்பே ரி ரிலீஸாகும் முதல் பாகம்…!