Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோப்ரா இயக்குனருடன் மீண்டும் இணையும் விக்ரம்… பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை!

கோப்ரா இயக்குனருடன் மீண்டும் இணையும் விக்ரம்… பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை!
, சனி, 30 ஜூலை 2022 (09:18 IST)
கோப்ரா திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடந்துவந்த  ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முடிவுற்றது. பின் தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதையடுத்து ஜூலை 11 ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் நடைபெற்றது.

இந்நிலையில் இப்போது ரிலீஸ் தேதி நெருங்கியுள்ள நிலையில் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன. விரைவில் தயாரிப்பு தரப்பில் இருந்து இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதற்கிடையில் விக்ரம் மீண்டும் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக ஏ ஜி எஸ் விக்ரம் கூட்டணியில் உருவாக இருந்த படத்தை கோமாளி இயக்குனர் பிரதீப் இயக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோமாளி இயக்குனரின் அடுத்த படமான “லவ் டுடே”… யுவன் இசையில் முதல் சிங்கிள் எப்போது?