Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முடியாத தயாரிப்பு பணிகள்! - விக்ரமின் கோப்ரா ரிலீஸ் ஒத்திவைப்பு!

முடியாத தயாரிப்பு பணிகள்! - விக்ரமின் கோப்ரா ரிலீஸ் ஒத்திவைப்பு!
, திங்கள், 16 மே 2022 (10:42 IST)
விக்ரம் நடித்து இந்த மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட கோப்ரா படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “கோப்ரா”. இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் கடந்த 2020லேயே தொடங்கிவிட்ட நிலையில் கொரோனா மற்றும் பல்வேறு காரணங்கள் காரணமாக படத்தை முடிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.

ஒருவழியாக அனைத்து ஷூட்டிங் பணிகளும் முடிந்த நிலையில் சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அதீரா பாடல் வெளியாகி வைரலானது. தொடர்ந்து இந்த மாதத்தில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தயாரிப்பு பணிகள் முழுவதுமாக முடிவடையாததால் இந்த மாதத்தில் படத்தை வெளியிட முடியாது என்பதால் ஆகஸ்ட் 12ம் தேதி பட ரிலீஸை ஒத்தி வைத்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீரன்ங்கள்லாம் சொல்றது… “பாத்துகலாம்”… இணையத்தில் வைரலான விக்ரம் டிரைலர்!