Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்சேதுபதியின் 'சீதக்காதி' டிரெய்லர் நாளை வெளியீடு

விஜய்சேதுபதியின் 'சீதக்காதி' டிரெய்லர் நாளை வெளியீடு
, செவ்வாய், 20 நவம்பர் 2018 (11:50 IST)
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள 25வது படமான 'சீதக்காதி' படத்தின் டிரெய்லர் நாளை காலை வெளியாக உள்ளது.
 
விஜய் சேதுபதியை வைத்து 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கியவர பாலாஜி தரணிதரன். இவர் விஜய்சேதுபதியின் 25வது படமான சீதக்காதி படத்தை இயக்கியுள்ளார். 

கலைக்கும் வயதுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை கதைக்கருவாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி 80 வயதுடைய அய்யா ஆதிமூலம் என்ற காதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இதில் இயக்குநர் மகேந்திரன், நடிகைகள் பார்வதி, ரம்யா நம்பீசன், காயத்ரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதனை ‘பேஷன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.
 
பரசுராமன் என்ற கதாபாத்திரத்தில் இயக்குனர் மௌலியும், லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடிகை அர்ச்சனாவும் நடித்துள்ளனர். நீதிபதியாக பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் நடித்துள்ளார்.

இந்நிலையில் நவம்பர் 21ம் தேதி காலை 11மணிக்கு டிரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் கிளீன் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். டிசம்பர் 20ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'2.o' ஜுரம்! இந்த வாரமே தமிழில் ஏழு படங்கள் ரிலீஸ்!