Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரி ரிலீஸில் சுத்தமாக செல்ஃப் எடுக்காத விஜய்யின் இன்னொரு சூப்பர்ஹிட் படம்!

ரி ரிலீஸில் சுத்தமாக செல்ஃப் எடுக்காத விஜய்யின் இன்னொரு சூப்பர்ஹிட் படம்!

vinoth

, செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (10:14 IST)
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அதிகளவில் பழைய படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்டு ஹிட்டடித்து வருகின்றன. இதில் விண்ணைத் தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம் போன்ற படங்கள் பெரிய வெற்றி பெற்றன. இதையடுத்து சமீபத்தில் விஜய்யின் கில்லி திரைப்படம் ரி ரிலீஸானது.

கில்லி படம் வெளியாகிய 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த படத்தை ஏப்ரல் 20 ஆம் தேதி சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் ரி ரிலீஸ் செய்துள்ளது. படம் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரைகளில் ரி ரிலீஸ் செய்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் முதல் நாளில் மட்டும் 4 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இரண்டாவது நாளிலும் இந்த படத்துக்கு ரசிகர்களின் வரவேற்புக் குறையவில்லை. இதனால் 2 நாட்களில் இந்த படம் 8 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் அதே நாளில் விஜய்யின் போக்கிரி திரைப்படமும் ரி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கில்லிக்கு கிடைத்த வரவேற்பு போக்கிரி படத்துக்கு சுத்தமாகக் கிடைக்கவில்லை. விஜய் ரசிகர்களே போக்கிரி படத்தை பார்க்கும் ஆர்வத்தைக் காட்டவில்லை என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

20 நாளில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா 10 நாளில் சூட்சகன்!