Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனிமல் படத்தைப் பாராட்டிய திரிஷா … ரசிகர்கள் வறுத்தெடுத்ததால் உடனே பதிவு நீக்கம்!

அனிமல் படத்தைப் பாராட்டிய திரிஷா … ரசிகர்கள் வறுத்தெடுத்ததால் உடனே பதிவு நீக்கம்!
, செவ்வாய், 5 டிசம்பர் 2023 (12:08 IST)
விஜய் தேவரகொண்டா நடித்த ’அர்ஜுன் ரெட்டி’என்ற படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இப்போது ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து  அனிமல் படத்தை இயக்கியுள்ளார்.  இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். படம் ரிலீஸாகி 3 நாட்களில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ள நிலையில் படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்த படம் பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவிட்ட நடிகை திரிஷா படத்தை “கல்ட்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் சமீபத்தில் மன்சூர் அலிகான் விவகாரத்தில் பெண்களின் மதிப்பு குறித்து பேசிய திரிஷா, இந்த படத்தை கல்ட் கிளாசிக் என சிலாகிப்பதா எனக் கேள்விகளை எழுப்பி ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

இதையடுத்து உடனடியாக திரிஷா அனிமல் படம் பற்றிய தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை நீக்கியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்றும் திரைப்படக் காட்சிகள் ரத்து!