Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘தளபதி 63’ படத்தை இயக்கப் போவது யார்?

‘தளபதி 63’ படத்தை இயக்கப் போவது யார்?
, வெள்ளி, 19 ஜனவரி 2018 (12:36 IST)
‘தளபதி 63’ படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யின் 62வது படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. பொதுவாக, விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் ஒரு படத்தில் நடிக்கும்போதே அவர்களின் அடுத்த படம் என்ன என்பது பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிடும். அந்த வரிசையில், விஜய்யின் 63வது படத்தை இயக்கப்  போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
அதற்கு விடையாக 3 இயக்குநர்களைக் கை காண்பிக்கின்றனர். ஒருவர் அட்லீ. விஜய்யை வைத்து அடுத்தடுத்து ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களை  இயக்கிய அட்லீ, அவரின் 63வது படத்தை இயக்கலாம் என்கிறார்கள். இன்னொருவர், ‘சதுரங்க வேட்டை’ மற்றும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை  இயக்கிய வினோத்.
 
மூன்றாவது இயக்குநர், மோகன் ராஜா. ‘வேலைக்காரன்’ ரிலீஸுக்குப் பிறகு இருவரும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு நார்மலானது என்று சொல்லப்பட்டாலும், விஜய் படத்தை இயக்கப் போகிறார் என்கிறார்கள். ஆக, இந்த மூன்று பேரில் ஒருவர்தான் தளபதியின் 63வது படத்தை இயக்கப் போகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா