Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யாவின் காப்பான் குறித்து முக்கிய அப்டேட்

சூர்யாவின் காப்பான் குறித்து முக்கிய அப்டேட்
, வியாழன், 21 பிப்ரவரி 2019 (18:06 IST)
சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ள என்ஜிகே ரெம்ப நாளாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இதற்கிடையில் சூர்யா கேவி ஆனந்த் இயக்கும்  புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. காப்பான் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து வருகிறார். இவருடைய காட்சிகள அனைத்தும் அண்மையில் படமாக்கி முடித்துவிட்டது படக்குழு.  இது தொடர்பாக இயக்குனர் கேவி ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
மோகன்லால், காப்பான் படத்தில் பிரதமர் வேடத்தில் நடித்துள்ளார்.  சால்ட் அண்டு பெப்பர் தோறறத்தில் ஜிப்பா அணிந்து பிரதமர் நரேந்திர மோடி போல் மோகன்லால் காணப்படுகிறார். அரசியல் திரில்லர் படமாக உருவாகும் சூர்யாவின் காப்பான் படத்தில் ஆரியா, சாயிஷா, போமன் இராணி, முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். லைகா புரொடக்ஷன் தயாரிக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜானுவுக்கு 6 விருதுகள்: திரிஷா ஹேப்பி அண்ணாச்சி