Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூர்யா சுதா கொங்கரா படத்தில் நடிக்க வேண்டுமா? 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

சூர்யா சுதா கொங்கரா படத்தில் நடிக்க வேண்டுமா? 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

vinoth

, புதன், 10 ஜனவரி 2024 (11:02 IST)
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில்  விரைவில் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளது.

இந்த படத்தின் டைட்டில் ப்ரமோஷன் வீடியோ கடந்த மாதம் வெளியாகி கவனம் பெற்றது. படத்தின் ப்ரமோஷன் வீடியோவில் புறநானூறு என்ற டைட்டில் இடம்பெற்றிருந்தது. இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் நடிக்க உள்ளனர். டிசம்பர் நான்காவது வாரத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க இருந்தது. ஆனால் இப்போது சில காரணங்களால் இந்த படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க நடிகர்கள் தேவை என இப்போது விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. நடிக்க ஆர்வமுள்ளவர் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நுங்கம்பாக்கம் எல் ஏ ஸ்டுடியோஸுக்கு வரவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் படத்தில் இருந்து வெளியேறுகிறாரா ஹெச் வினோத்?