Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிங்கப்பூர் சலூன் படத்தில் சர்ப்ரைஸாக நடித்திருக்கும் பிரபல நடிகர்!

சிங்கப்பூர் சலூன் படத்தில் சர்ப்ரைஸாக நடித்திருக்கும் பிரபல நடிகர்!

vinoth

, செவ்வாய், 23 ஜனவரி 2024 (07:15 IST)
ஆர்ஜே பாலாஜி கதாநாயகனாக நடிக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தை இயக்குனர் கோகுல் இயக்கி வருகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த படத்தில் அவர் சலூன் கடை வைத்திருக்கும் நபராக நடித்து வருகிறார் என்பது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து தெரிய வருகிறது. படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படம் ஜனவரி 25 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. அதன்படி இஞ்ஜினியரிங் முடித்துவிட்டு ஒரு வெற்றிகரமான முடி திருத்துனராக வர ஆசைப்படும் ஒரு இளைஞனின் போராட்டத்தைப் பற்றிய படமாக சிங்கப்பூர் சலூன் இருக்கும் என டிரைலர் கோடிட்டு காட்டுகிறது.

இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள நிலையில், சர்ப்ரைஸாக அரவிந்த் சுவாமியும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், அதை படக்குழு ரகசியமாக வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல் ஐ சி படத்தின் ஷூட்டிங்கை ஈஷா மையத்தில் தொடங்கிய விக்னேஷ் சிவன்!