Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் 69 படத்தின் ஒளிப்பதிவாளர் இவர்தான்? இணையத்தில் பரவும் தகவல்!

விஜய் 69 படத்தின் ஒளிப்பதிவாளர் இவர்தான்? இணையத்தில் பரவும் தகவல்!

vinoth

, வியாழன், 9 மே 2024 (15:39 IST)
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்துக்குப் பிறகு இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு விஜய் அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அவரின் கடைசி படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் இப்போது அந்த இயக்குனர் ஹெச் வினோத்தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையில் தொழில்நுட்பக் குழுவினரை ஹெச் வினோத் ஒப்பந்தம் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் கைதி, மற்றும் மாஸ்டர் ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலிவுட்டில் ஏறுமுகத்தில் செல்லும் ராஷ்மிகாவின் மார்க்கெட்… சூப்பர் ஸ்டார் நடிகரோடு அடுத்த படம்!