Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராமாயணம் படத்தில் நடிக்க சாய் பல்லவிக்கு இத்தனை கோடி சம்பளமா?

ராமாயணம் படத்தில் நடிக்க சாய் பல்லவிக்கு இத்தனை கோடி சம்பளமா?

vinoth

, செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (07:24 IST)
பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் ராமாயணம் சம்மந்தப்பட்ட படத்தில் ராமன் வேடத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும்  ராவணன் வேடத்தில் கேஜிஎஃப் புகழ் யாஷும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் அனுமன் வேடத்தில் சன்னி தியோலும், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், கைகேயியாக லாரா தத்தாவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் 19 ஆம் தேதி ராமநவமியின் போது வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்காக இப்போது நடிகர் நடிகைகள் அனைவரும் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மூன்று பாகங்களாக உருவாகவுள்ள இந்த படத்தில் நடிக்க சாய்பல்லவிக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாகக் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“மைக்கேல் ஜாக்சன் பயோபிக்கை ஹாலிவுட்டில் இயக்கணும்”… அனிமல் இயக்குனர் ஆசை!