Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இது வழக்கமான ரஜினி படம் இல்லை… வேட்டையன் அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்!

இது வழக்கமான ரஜினி படம் இல்லை… வேட்டையன் அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்!

vinoth

, செவ்வாய், 7 மே 2024 (07:28 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியில் நடக்க, இரண்டாம் கட்ட ஷூட்டிங் மும்பையில் படமாக்கப்பட்டது. அங்கே அமிதாப் பச்சன் நடிக்கும் காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு. அதையடுத்து இப்போது சென்னையில் இந்த படத்தின்  பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகர் ராணா தற்போது அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படம் பற்றி பேசிய ராணா ‘இது வழக்கமான ரஜினி டெம்ப்ளேட் படம் இல்லை. காவல்துறை, நீதித்துறை உள்ளிட்ட சிஸ்டம் பற்றி பேசும் படம். ரஜினி சார் இதுபோன்ற ஒரு கதையைத் தேர்வு செய்வதில் எனக்கு மகிழ்ச்சி. ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற என்னுடைய ஆசை நிறைவேறும் என்று நான் நினைக்கவேயில்லை” என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய படத்தில் மீண்டும் இணையும் "ஒரு நொடி" படக்குழு