Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராம்சரண் தேஜா நடிக்கும் படத்தில் இணைந்த பிரபல தமிழ் ஒளிப்பதிவாளர்!

ராம்சரண் தேஜா நடிக்கும் படத்தில் இணைந்த பிரபல தமிழ் ஒளிப்பதிவாளர்!

vinoth

, திங்கள், 26 பிப்ரவரி 2024 (14:40 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண். இவர்  இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. தற்போது,  அவர் ஷங்கர் இயக்கத்தில் கேம்சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய்யின் வாரிசு படத் தயாரிப்பாளர் தில்ராஜூ  தயாரித்து வருகிறார். இந்த படம் நீண்டகாலமாக உருவாக்கத்தில் உள்ளது.

இதையடுத்து ராம்சரண் உப்பென்னா படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை தற்போது RC16 என அழைத்து வருகின்றனர். இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், கதாநாயகியாக சாய் பல்லவியும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரத்னவேலு ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலிவுட் முன்னணி ஹீரோவை இயக்கும் பத்து தல புகழ் கிருஷ்ணா!