Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்பைடர் தோல்வி; தயாரிப்பாளருக்கு கைகொடுக்கும் வாரிசு நடிகர்!!

ஸ்பைடர் தோல்வி; தயாரிப்பாளருக்கு கைகொடுக்கும் வாரிசு நடிகர்!!
, திங்கள், 6 நவம்பர் 2017 (12:26 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல், எஸ்.ஜே.சூர்யா உள்ளிடோர் நடிப்பில் வெளியான படம் ஸ்பைடர். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது.


 
 
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த படம் தோல்வியை தழுவியது. இதனால் பட தயாரிப்பாளர் என்.வி.பிரசாத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால் இதனை, படத்தின் இயக்குனரும், நடிகரும் கண்டுக்கொள்ளவில்லை. 
 
ஸ்பைடர் படத்தை வாங்கி வெளியிட்டவர்கள் கேட்கும் நஷ்ட ஈட்டை கொடுக்க முடியாமல் தயாரிப்பாளர் தவித்து வருகிறார். இந்நிலையில், தயாரிப்பாளரை காப்பாற்ற ராம் சரண் முன்வந்துள்ளார். 
 
ஆம், என்.வி.பிரசாத்திற்கு தனது புதிய படத்தை தயாரிக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளாராம் ராம் சரண். ஏற்கனவே இவர் தயாரிப்பில் துருவா, ரச்சா ஆகிய படங்களில் ராம் சரண் நடித்துள்ளார். 
 
இது பற்றி விவரம் அறிந்த விநியோகஸ்தர்கள், ராம்சரண் படத்தை குறைந்த விலைக்கு வாங்கி நெருக்கடியை ஈடுகட்டிக்கொள்ளளாம் என அமைதியாகியுள்ளார்களாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாலிவுட் பிரபலத்திடமிருந்து பாராட்டு; நடிகர் சித்தார்த் ட்வீட்