Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினியின் '2.0 படத்தின் சென்சார் தகவல்கள்

ரஜினியின் '2.0 படத்தின் சென்சார் தகவல்கள்
, செவ்வாய், 13 நவம்பர் 2018 (20:34 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தை இன்று சென்சார் அதிகாரிகள் பார்த்து படத்திற்கு 'யூஏ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் படம் பிரமாண்டமாக இருப்பதாக சென்சார் அதிகாரிகள் கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

webdunia
இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதை அடுத்து இந்த படம் நவம்பர் 29ல் வெளியாகவுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்சார் தகவல் மற்றும் ரிலீஸ் தேதியுடன் கூடிய டுவீட் ஒன்றை லைகா நிறுவனம் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது. எனவே ரஜினி ரசிகர்கள் வரும் 29ஆம் தேதி இந்த படத்தை காண்பது உறுதியாகியுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் ராக்கர்ஸ் பயமுறுத்தல் எதிரொலி: '2.0' படக்குழு எடுத்த அதிரடி முடிவு