Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மன உளைச்சலில் மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட ரைசா வில்சன் - ஆதரவு கொடுக்கும் பிரபலங்கள்!

மன உளைச்சலில் மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட ரைசா வில்சன் - ஆதரவு கொடுக்கும் பிரபலங்கள்!
, வெள்ளி, 19 மே 2023 (14:13 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானவர் ரைசா வில்சன். நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மல மலவென குவியத்தொடங்கியது. இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்.
 
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னரே ரைசா விஐபி- 2 படத்தில் நடித்தார். பிறகு பிக் பாஸ் ஹவுஸ் மெட் ஆன ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தற்போது ‘ஆலிஸ்’ விஷ்ணு விஷாலுடன் FIR, அலைஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
 
இதற்கிடையில் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது தான் தனிமையில் மிகுந்த மனஉளைச்சலோடு இருப்பதாக கூறி கண்ணீர் விட்டு அழுத புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமலின் இரண்டாம் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்த சிவாஜி - பழைய புகைப்படம் வைரல்!