Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதீப் ரங்கநாதன் - அஸ்வத் மாரிமுத்து படத்தின் டைட்டில் இதுதான்: அர்ச்சனா கல்பாத்தி அறிவிப்பு..!

பிரதீப் ரங்கநாதன் - அஸ்வத் மாரிமுத்து படத்தின் டைட்டில் இதுதான்: அர்ச்சனா கல்பாத்தி அறிவிப்பு..!

Siva

, ஞாயிறு, 5 மே 2024 (14:40 IST)
லவ் டுடே என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான பிரதீப் ரங்கநாத் மற்றும் ’ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் பிரபலமான அஸ்வத் மாரிமுத்து ஆகிய இருவரும் ஒரே படத்தில் இணைகின்றனர் என்றும் இந்த படத்தை ’கோட்’ படத்தை தயாரித்து வரும் அர்ச்சனா கல்பாத்தி  தயாரிக்க உள்ளார் என்றும் ஏற்கனவே அறிவிப்பு வெளியானது என்பதை பார்த்தோம். 
 
அதுமட்டுமின்றி இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்  வெளியானது என்பதும் அந்த வீடியோ இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து இணையும் படத்தின் டைட்டில் இன்று காலை 9 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் சில மணி நேரங்கள் தாமதமாக வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’டிராகன்’ என்று டைட்டில் வைத்துள்ள நிலையில் இந்த டைட்டில் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளதாகவும் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று இந்த ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.. 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதம் மாறிய பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான்..! புதுப்பெயர் என்ன தெரியுமா?