Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனுஷுக்காக இணைந்த ஏ ஆர் ரஹ்மான் & பிரபுதேவா…ராயன் பட லேட்டஸ்ட் அப்டேட்!

தனுஷுக்காக இணைந்த ஏ ஆர் ரஹ்மான் & பிரபுதேவா…ராயன் பட லேட்டஸ்ட் அப்டேட்!

vinoth

, வியாழன், 9 மே 2024 (06:48 IST)
தனுஷ் தனது 50 ஆவது படமான ராயன் -ஐ தானே இயக்கி மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்தார்.

இதில் தனுஷ் அண்ணனாகவும், காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் அவரின் தம்பிகளாகவும் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பாஸ்ட்புட் கடை வைத்திருக்கும் சகோதரர்கள் எப்படி கேங்ஸ்டராக மாறுகிறார்கள் என்பதே கதை என சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கும் நிலையில் முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாக உள்ளது.

அடங்காத அசுரன் என்ற இந்த பாடலின் வரிகளை தனுஷ் எழுத ஏ ஆர் ரஹ்மான் இசைக்கு பிரபுதேவா நடனத்தை வடிவமைத்துள்ளாராம். இந்த பாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு படம் ஹிட் அடிச்சிட்டா போதுமே.. சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்திய அனுபமா!