Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகை நயன்தாராவின் சம்பளம் ரூ.4 கோடி!

நடிகை நயன்தாராவின் சம்பளம் ரூ.4 கோடி!
, வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (11:53 IST)
நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நயன்தாராவுக்கு தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல், தெலுங்கிலும் டாப் மார்க்கெட் உள்ளது. இவரது படங்கள் பெரிய நடிகர்களின் படங்களுக்கு நிகராக வசூலை வாரி குவிக்கின்றன. இதனால் இவரை தேடி பல இயக்குனர்கள் குவிந்து வருகிறார்கள்.நயன்தாரா சமீபத்தில் நடித்த அறம், வேலைக்காரன் படம் பெரும் ஹிட்டானது. 

கோலமாவு கோகிலா படத்தில்  கதாநாயகன் இல்லை, நயன்தாராவை முதன்மை படுத்தியே காமெடியாக படம் எடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் விஜய், அஜித்குமார், சூர்யா உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு அதிகாலை 6 மணிக்கு ரசிகர்களுக்காக பிரத்யேகமாக சிறப்பு காட்சிகள் திரையிடுவதுபோல் கோலமாவு கோகிலா படத்துக்கும் சிறப்பு காட்சிகள் திரையிடுகிறார்கள்.  தமிழ் திரையுலக வரலாற்றில் நடிகையை முதன்மைப்படுத்திய எந்த படத்துக்கும் இதுபோல் சிறப்பு காட்சிகள் திரையிட்டது இல்லை . 
webdunia
அஜித்குமார் ஜோடியாக விஸ்வாசம் படத்தில் நடிக்கிறார். சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். இப்போது சிவகார்த்திகேயன் ஜோடியாகவும் புதிய படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த நிலையில் இதுவரை ரூ.3 கோடி வாங்கி வந்த நயன்தாரா இப்போது தனது சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜோதிகா பெண்களுக்கு கூறும் 10 அதிரடி கட்டளைகள்