Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலெக்டரை அடுத்து பத்திரிகையாளர் வேடத்தில் நயன்தாரா

கலெக்டரை அடுத்து பத்திரிகையாளர் வேடத்தில் நயன்தாரா
, வெள்ளி, 8 டிசம்பர் 2017 (11:29 IST)
சமீபத்தில் கோபிநயினார் இயக்கத்தில் வெளியான 'அறம்' திரைப்படத்தில் நயன்தாரா கலெக்டர் வேடத்தில் சூப்பராக நடித்திருந்தார். அவருடைய நடிப்பிற்கு பெரும் பாராட்டுக்கள் கிடைத்தது
 
இந்த நிலையில் கலெக்டரை அடுத்து தற்போது பத்திரிகையாளராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஷரதா ஸ்ரீநாத் நடிப்பில் கடந்த ஆண்டு கன்னடத்தில் வெளியான வெற்றிப்படமான 'யூடர்ன்' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
 
இந்த படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சைத்தான், சத்யா படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த விபரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்புவிடம் தனுஷ் வைத்த கோரிக்கை