Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நட்டி நடிக்கும் ‘சில்க்’

நட்டி நடிக்கும் ‘சில்க்’
, புதன், 4 ஏப்ரல் 2018 (13:13 IST)
நட்டி நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு ‘சில்க்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
 
 
ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி, ‘ரிச்சி’ படத்தைத் தொடர்ந்து நடிக்கும் படம் ‘சில்க்’. ஹரி மற்றும் ஹரீஷ் என இரட்டை இயக்குநர்கள் இந்தப் படத்தை இயக்குகின்றனர். த்ரில்லர் படமாக இது உருவாக இருக்கிறது.
webdunia
 
சில்க் என்றதும், நடிகை சில்க் ஸ்மிதா என நீங்கள் நினைத்துவிட வேண்டாம். சில்க் புடவைக்கும், டெலிவரி பாயாக வேலைபார்க்கும் ஹீரோவுக்கும் இடையிலான கதைதான் இந்தப் படம். காஞ்சிபுரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் படத்துக்கு ‘விக்ரம் வேதா’ சாம் சி.எஸ். இசையமைக்கிறார். ‘சத்யா’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த அருண்மணி ஒளிப்பதிவு செய்கிறார். ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தை வெளியிடும் மிஷ்கின் தயாரிப்பாளர்