Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நானி நடிக்கும் படத்தை இயக்குகிறாரா கார்த்திக் சுப்பராஜ்?

நானி நடிக்கும் படத்தை இயக்குகிறாரா கார்த்திக் சுப்பராஜ்?
, சனி, 16 டிசம்பர் 2023 (09:42 IST)
தசரா படத்தின் வெற்றியை அடுத்து நானி அடுத்து நடித்த “ஹாய் நானா”திரைப்படம் டிசம்பர் 7 ஆம் தேதி ரிலீஸாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்துக்கு பிறகு பேன் இந்தியா திரைப்படமான சூர்யாவின் சனிக்கிழமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விவேக் ஆத்ரேயா இயக்குகிறார்.

இதையடுத்து அவர் தமிழ் சினிமாவிலும் கவனம் செலுத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவர் டான் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அந்த படத்துக்கு பதிலாக அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தை நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்காக கார்த்திக் சுப்பராஜை சந்தித்து அவர் சொன்ன கதையைக் கேட்டு ஓகே சொல்லியுள்ளதாக தெரிகிறது. கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரோமாஞ்சம் இயக்குனர் இயக்கத்தில் பஹத் பாசில் நடிக்கும் ஆவேஷம் படத்தின் முதல் லுக் போஸ்டர்!