Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குட்னைட் பட கதாநாயகிக்கு நடந்த நிச்சயதார்த்தம்!

குட்னைட் பட கதாநாயகிக்கு நடந்த நிச்சயதார்த்தம்!
, வெள்ளி, 24 நவம்பர் 2023 (14:06 IST)
இந்த ஆண்டு மே மாதம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும்  குவித்தது. இந்த படத்தில் ஜெய்பீம் புகழ் மணிகண்டன், மீதா ரகுநாத் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கி இருந்தார்.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து இந்த படத்தின் ஹீரோயின் அதிக படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பெரிதாக எந்த படங்களிலும் பெரிதா ஒப்பந்தம் ஆகவில்லை.

இந்நிலையில் இப்போது மீதாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விரைவில் அவரின் திருமண தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை ராதிகாவை கதாநாயகி ஆக்கி படம் இயக்கும் அறம் கோபி!