Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயக்குனர் சீனுராமசாமி மீது மனிஷா யாதவ் புகார்.. மீண்டும் ஒரு பரபரப்பு..!

இயக்குனர் சீனுராமசாமி மீது மனிஷா யாதவ் புகார்.. மீண்டும் ஒரு பரபரப்பு..!
, வெள்ளி, 24 நவம்பர் 2023 (18:32 IST)
நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில் தற்போது நடிகை மனிஷா யாதவ் தன்னை அவமரியாதையாக சீனு ராமசாமி நடத்தியதாக தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 இயக்குனர் சீனு ராமசாமி, நடிகை  மனிஷா யாதவ்வை அவமரியாதையாக நடத்தியதாக ப்ளூ சட்டை மாறன் புகார் அளித்த நிலையில் அதற்கு  சீனி ராமசாமி பதில் அளித்து இருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது

வணக்கம், இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிடுடடாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார். ஒரு குப்பை கதை ஆடியோ விழாவில் நன்றி சொல்றாங்க
10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க, திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க...
இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வரும் என்று தெரிவித்திருந்தார்,.

இந்த நிலையில் சீனுராமசாமிக்கு மனிஷா யாதவ் பதிலளித்துள்ளார்.   நான் எங்கே சீனு ராமசாமியின் படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னேன்? முதல்முறையாக இதையெல்லாம் கேட்கிறேன். ஒரு குப்பை கதை ஆடியோ நிகழ்ச்சியில் ஸ்டேஜில் அவர் இருந்ததால் எல்லோருக்கும் நன்றி சொல்வது போல் அவருக்கும் நன்றி சொன்னேன். ஆனால் எனக்கு நேர்ந்த எதுவும் மாறிவிடாது. ஒன்பது வருடங்களுக்கு முன் நான் சொன்ன வார்த்தைகள் மட்டும் உண்மை, என்னை மரியாதை குறைவாக நடத்திய ஒருவரோடு நான் ஏன் பணி புரிய வேண்டும்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தவறு செய்வது மனிதம், மன்னிப்பது தெய்வீகம்"- திரிஷா