Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவரசா ஆந்தாலஜியில் இருந்து நீக்கப்பட்ட சிவகார்த்திகேயன் பட இயக்குனரின் பகுதி! அதிர்ச்சி தகவல்!

நவரசா ஆந்தாலஜியில் இருந்து நீக்கப்பட்ட சிவகார்த்திகேயன் பட இயக்குனரின் பகுதி! அதிர்ச்சி தகவல்!
, செவ்வாய், 2 மார்ச் 2021 (07:30 IST)
நவரசா என்றொரு ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் தயாரித்து வருகிறார்.

இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயந்திரா ஆகியோர் இணைந்து நெட்பிளிக்ஸுக்காக ஆந்தாலஜி திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர். நவரசா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் 9 கதைகள் காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். இந்த தொடருக்கு கிரியேட்டிவ் ஹெட்டாக மணிரத்னம் உள்ளார். இந்த 9 படங்களையும் கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், அரவிந்த் சாமி, கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்பராஜ், கே வி ஆனந்த், சர்ஜுன், பொன்ராம் ஆகியோர் ஒப்பந்தமானார்கள்.

இந்த 9 படங்களும் தயாரான நிலையில் சம்மந்தப்பட்ட ஓடிடி நிறுவனம் எல்லா படங்களையும் பார்த்துள்ளது. அதில் இயக்குனர் பொன்ராமின் படத்தில் அவர்களுக்கு திருப்தி இல்லாததால் அதை நீக்க சொல்லிவிட்டனராம். அதனால் இப்போது புதிதாக அந்த பகுதியை இயக்க முன்னணி இயக்குனர் வசந்த் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்ணன் தொலைக்காட்சி உரிமையைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!