Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''இருவருக்கும் முக்கிய படம்''- பிரபாஸுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்?

''இருவருக்கும் முக்கிய படம்''- பிரபாஸுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்?
, சனி, 24 ஜூன் 2023 (20:40 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பின் விஜய் நடிப்பில் லியோ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தை செவன் கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்து வருகிறார். இப்படத்தில், திரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். மன்சூர் அலிகான், சஞ்சய் சத், அர்ஜூன்  உள்ளிட்ட நடிகர்கள் வில்லன்கள் வேடத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி  ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தை அடுத்து, தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பிரபாஸின் லோகேஷ் இயக்குவதாக தகவல் வெளியானது.

சமீபத்தில் ஒரு பேட்டியில் இதுபற்றி லோகேஷ் கனகராஜ், ‘’எங்கள் இருவரின் வாழ்க்கையிலும் இப்படம் முக்கிய படமாக இருக்கும் என்றும் லியோ படத்திற்குப் பின் இப்பட வேலைகள் தொடங்கும் என்று கூறியதாக’’ தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''சாதிப் பெயர்கள் கொண்ட பாடல்களுக்கு தடைவிதிக்க வேண்டும்''- பிரபல இயக்குனர்