Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'லால் சலாம்'' பட டீஸர் சன் டிவி யூடியூப் பக்கத்தில் ரிலீஸ்

sun tv-  lal salaam
, சனி, 11 நவம்பர் 2023 (19:13 IST)
'லால் சலாம்' படத்தின் டீசர் வெளியீட்டு பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.
 
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது  நடிகர்கள் டப்பிங் மற்றும் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
இந்த நிலையில் சற்றுமுன் லைகா நிறுவனம் லால் சலாம் திரைப்படம் பொங்கல் திருநாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் 'லால் சலாம்' படத்தை தமிழகத்தில்   உள்ள தியேட்டர்களில்  ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர்.
 
எனவே இப்படத்தின் முக்கிய அப்டேட்டை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி,   தீபாவளி பண்டிகையொட்டி, லால் சலாம் பட டிரைலர் வரும் நவம்பர் 12 ஆம் தேதி காலை 10;45க்கு வெளியாகும் என அறிவித்தது.
 
அதேபோல் இப்படம் ஏற்கனவே அறிவித்தபடி வரும் பொங்கலுக்கு உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை  நேற்று வெளியிட்டது.
 
இதையடுத்து, இன்று  இப்படத்தின் ஆடியோ உரியையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
 
இந்த நிலையில், லால்  சலாம் பட டீசர்   நாளை  காலை 10:45 மணிக்கு  சன்டிவி யூடியூப்  பக்கத்தில் வெளியாகும் என  சன் டிவியின் வலைதள பக்கத்தில்  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதீப் ரங்கநாதன்- எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன்?