Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த சர்ச்சைக்கு தயாரான கங்கனா… எமர்ஜென்சி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த சர்ச்சைக்கு தயாரான கங்கனா… எமர்ஜென்சி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

vinoth

, புதன், 24 ஜனவரி 2024 (07:14 IST)
சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத்  இந்திரா காந்தி வேடத்தில் எமர்ஜென்ஸி என்ற படத்தில் நடித்து இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்துள்ளது. இந்த படம் பற்றி பேசிய கங்கனா “படம் இந்திரா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றுப் படமாக இல்லாமல் அரசியல் வரலாற்றுப் படமாக இருக்கும்” எனத் தெரிவித்து இருந்தார்.

மேலும் அவர் “இந்த படத்துக்கான நான் எனது அனைத்து சொத்துகளையும் அடமானம் வைத்து எடுத்துள்ளேன்.” எனக் கூறியிருந்தார். இந்த படம்  கடந்த நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 14 ஆம் தேதி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆதரவாளரான கங்கனாவின் எமர்ஜென்சி திரைப்படத்தில் இந்திராகாந்தி எவ்வாறு காட்சிப் படுத்தப்பட்டுள்ளார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் ரிலீஸானதும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யின் The GOAT படத்தின் எதிர்பார்ப்பை எகிறவைத்த வெங்கட்பிரபுவின் பதிவு!