Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியான அறிவிப்பு!

கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியான அறிவிப்பு!

vinoth

, புதன், 8 மே 2024 (15:51 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது.  இதில் கமல்ஹாசன், சிம்பு மற்றும் அபிராமி உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இடையில் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் கொடுத்த தேதியில் தக்லைஃப் படக்குழுவினரால் அவர்களை வைத்து ஷூட்டிங் எடுக்க முடியாததால் அவர்கள் படத்தில் இருந்து விலகியதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது அவர்கள் மீண்டும் இணைந்துள்ளதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் சிம்பு தக் லைஃப் படத்தில் சிம்பு இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் தக்லைஃப் படத்தை தயாரித்து வரும்  ரெட் ஜெயண்ட் மூவிஸ், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் தக் லைஃப் படத்தின் ரிலீஸ் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் தேவரா படக்குழுவினரை தேனீக்கள் கொட்டி காயம்!