Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏப்ரலில் வெளியாகிறது கமல்ஹாசனின் அடுத்த படம்

ஏப்ரலில் வெளியாகிறது கமல்ஹாசனின் அடுத்த படம்
, செவ்வாய், 25 டிசம்பர் 2018 (22:01 IST)
கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம் 2' திரைப்படம் இந்த ஆண்டு வெளியான நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான 'இந்தியன் 2' திரைப்படம் வரும் 2020ஆம் ஆண்டு தான் வெளியாகவுள்ளது. அதுவரை கமல் நடித்த படம் வெளியாக வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் 'கடாரம் கொண்டான்' திரைப்படம் வரும் வரும் ஏப்ரலில் வெளியாகவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

webdunia
கமல் தயாரிப்பில் நடிகர் விக்ரம் மற்றும் அக்சராஹாசன் நடித்து வரும் 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே கமல், த்ரிஷா நடித்த 'தூங்காவனம்' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் நாசர் மகன் அபி மெஹ்தி ஹாசன், '8 தோட்டாக்கள்' பட நாயகி மீராமிதுன் ஆகியோர்களும்  நடித்து வருகின்றனர். இந்த படம் நடிகர் விக்ரம் நடித்து வரும் 56ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'பேட்ட' படத்திற்கு அடுத்த நாள் கம்பீரமாக வெளிவரும் கார்த்தியின் 'தேவ்