Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காஜல் அகர்வால் நடிக்கும் ‘சத்யபாமா’… ஆக்‌ஷன் படத்தின் டைட்டில் க்ளிம்ப்ஸ்!

காஜல் அகர்வால் நடிக்கும் ‘சத்யபாமா’… ஆக்‌ஷன் படத்தின் டைட்டில் க்ளிம்ப்ஸ்!
, செவ்வாய், 20 ஜூன் 2023 (07:27 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்துள்ள அவர் அங்கும் முதன்மை கதாநாயகியாக வலம் வருகிறார்.

திருமணம் ஆகி குழந்தை பெற்றுக்கொண்ட அவர் இப்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால் இந்தியன் 2 மற்றும் பாலய்யாவின் பகவத் கேசரி ஆகிய இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த படங்களை முடித்ததும் அவர் சினிமாவை விட்டு முழுமையாக விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தன் குழந்தையோடு அதிக நேரத்தை செலவிடுவதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த தகவலை பொய்யாக்கும் விதமாக இப்போது காஜல் அகர்வால் புதிதாக நடிக்கும் சத்யபாமா என்ற படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த படத்தில் காஜல் அகர்வால் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தை அகில் தெகலா என்பவர் இயக்குகிறார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாமன்னன் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும்… உதயநிதி நடித்த ஏஞ்சல் பட தயாரிப்பாளர் வழக்கு!