Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முடிவுக்கு வந்தது கமல்ஹாசனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு

முடிவுக்கு வந்தது கமல்ஹாசனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு
, புதன், 9 ஜனவரி 2019 (12:49 IST)
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு 'விஸ்வரூபம் 2' திரைக்கு வந்த நிலையில் அவருடைய அடுத்த படமான 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் 'கடாரம் கொண்டான். இந்த படத்தில் விக்ரம், அக்சராஹாசன் முதல்முறையாக ஜோடியாக நடித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒரே ஒரு பாடல் படப்பிடிப்பு தவிர மற்ற படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டாதாக இந்த படத்தின் இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நேற்றிரவு ஒரு டின்னர் நடந்ததாகவும், இந்த டின்னரில் இந்த படத்தின் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டதாகவும், புகைப்படத்துடன் அவர் பதிவு செய்துள்ளார்.

webdunia
இந்த படத்தில் நடிகர் நாசரின் மகன் அபி மெஹ்தி ஹாசன் நடிகராக அறிமுகமாகிறார். மேலும்  '8 தோட்டாக்கள்' படத்தில் நடித்த நடிகை மீராமிதுனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஸ்வாசம் படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கலையாம் - உண்மையை உளறிய சிவா..!