Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை படமாகிறதா? வெளியாகும் தகவல்

ramadoss

Sinoj

, செவ்வாய், 23 ஜனவரி 2024 (17:55 IST)
பாமக முன்னாள் தலைவரும், டாக்டருமான ராமதாஸ் அவர்களின் வாழ்க்கை படமாக உள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்று பாமக. இக்கட்சியை நிறுவியர் டாக்டர் ராமதாஸ். இவரது வாழ்க்கை வரலாறு படமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரபலமான மற்றும் புகழ்பெற்ற அரசசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்- வீராங்கனைகள், சமூக ஆர்வலர்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ், ராஜசேகர ராவ் உள்ளிட்ட பலரது வாழ்க்கை படங்கள் வெளியானது.

இந்த நிலையில் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளதாகவும் இப்படத்தை இயக்குனர் சேரன் இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை படத்தில் அவரது இளமைக்காலம், மருத்துவராக பணியாற்றிய நிகழ்வுகள், அவர் அரசியல் கட்சியை நிறுவவி வன்னிய சமுதாய மக்களுக்கு உதவியது…வேலைவாய்ப்பு மற்றும் தனி ஒதுக்கீடு பெற போராட்டங்கள் நடத்தியது இதில் இடம்பெறவுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், ராமதாஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்க  நடிகர் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படத்தின் பெயரை மாற்றிய விக்னேஷ் சிவன்?