Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இறுகப் பற்று படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா? வெளியான தகவல்!

இறுகப் பற்று படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா? வெளியான தகவல்!
, செவ்வாய், 31 அக்டோபர் 2023 (14:36 IST)
விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் இறுகப் பற்று. எலி, தெனாலி ராமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவ்ராஜ் தயாளன் இந்த படத்தை இயக்கியுள்ளார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும், இந்த திரைப்படம் தியேட்டர்களுக்கு ரசிகர்களைக் கவரவில்லை. ஆனாலும் சிறிய பட்ஜெட் படம் என்பதால் சேட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமம் மூலமாக இந்த படம் லாபம் பார்த்துவிடும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது திரையரங்குகளில் இருந்து முழுமையாக தூக்கப்பட்டு விட்ட இந்த திரைப்படம் நவம்பர் 3 ஆம் தேதி ஒரு பிரபல ஓடிடியில் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹரா படத்தில் மோகனுக்கு ஜோடியான நடிகை அனுமோல்!