Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்திற்காக மேலும் ஒரு படத்தை தயாரிப்பேன் - போனி கபூர்!

அஜித்திற்காக மேலும் ஒரு படத்தை தயாரிப்பேன் - போனி கபூர்!
, திங்கள், 17 டிசம்பர் 2018 (17:35 IST)
தல அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் வரும் பொங்கலன்று வெளியாக உள்ளது. தல ரசிகர்கள் 'தல' பொங்கலைக் கொண்டாட ஆவலுடன் இருக்கிறார்கள்.  


 
விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித்தின் 59-வது படத்தை ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குகிறார். இதனை ‘ஜீ ஸ்டுடியோஸ்' நிறுவனத்துடன் இணைந்து மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். 
 
இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்காக தமிழில் இயக்கப்படும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 
 
சமீபத்தில் இப்படத்திற்கான பூஜை போடப்பட்டு இன்று முதல் நாள் படப்பிடிப்பு ஆரம்பமானது. 
 
இந்நிலையில் தற்போது இதைப்பற்றி பேசிய போனிகபூர், "ஶ்ரீதேவியின் விருப்பத்தின்படி அஜித் நடிக்கும் பிங்க் படத்தை ரீமேக் செய்கிறோம். இந்தப் படம் 2019, மே 1-ம் தேதி அஜித்தின் பிறந்தநாளுக்கு வெளியாகிறது. 
 
இந்த படத்தையடுத்து மேலும் ஒரு படத்தை அஜித்துக்காக தயாரிக்கிறேன். அந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜூலையில் தொடங்கி, 2020 ஏப்ரல் 10-ம் தேதி வெளியிட இருக்கிறோம்" என்றார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனா ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியானது