Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கைவிரித்த கமல்.. கைகொடுத்த தனுஷ்… ஹெச் வினோத்தின் அடுத்த படம் இதுதான்!

கைவிரித்த கமல்.. கைகொடுத்த தனுஷ்… ஹெச் வினோத்தின் அடுத்த படம் இதுதான்!

vinoth

, புதன், 24 ஜனவரி 2024 (08:19 IST)
விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்தியன் 2 ஷூட்டிங்கை பெரும்பகுதி முடித்துள்ள கமல் அடுத்து பிரபாஸின் கல்கி 2898 படத்தில் விலல்னாக நடிக்க 150 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் ஹெச் வினோத் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இப்போது கல்கி முதல் பாகத்துக்கான தனது காட்சிகளை நடித்து முடித்துள்ளார் கமல். இப்போது இந்தியன் 2 இறுதிகட்ட ஷூட்டிங்கில் நடித்து வருகிறார். இதன் பிறகு மணிரத்னம் மற்றும் ஹெச் வினோத் இயக்கும் படங்களில் ஒரே நேரத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது கமல் படத்தில் இருந்து ஹெச் வினோத் வெளியேற உள்ளதாக சொல்லப்படுகிறது. கமல் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருப்பதால் இப்போதைக்கு ஹெச் வினோத் படத்தில் நடிக்க முடியாத சூழலில் உள்ளாராம். அதனால் வினோத், அடுத்து தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி முடித்துவிட்டு, பின்னர் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொன்னியின் செல்வன் விற்பனையை ஒட்டுமொத்தமாக முடித்துவிட்ட மணிரத்னம்… விற்பனையாளர்கள் புலம்பல்!