Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜி வி பிரகாஷ் நடிக்கும் ரிபெல் படத்தின் வெளிநாட்டு உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்!

ஜி வி பிரகாஷ் நடிக்கும் ரிபெல் படத்தின் வெளிநாட்டு உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்!

vinoth

, செவ்வாய், 5 மார்ச் 2024 (11:48 IST)
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர், ஜெயில், டார்லிங், அடியே, பேச்சிலர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடிப்பதுடன் முன்னணி நடிகர்களில் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.  சூர்யாவின் அடுத்த படத்துக்கு இசையமைப்பதன் மூலம் 100 படங்களைக் கடந்துள்ளார்.

ஜிவி.பிரகாஷ்குமார்  நடிக்கும் புதிய படமான ரிபெல் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை கடந்த ஆண்டு நடிகர் சிம்பு வெளியிட்டார். இப்படத்தை  நிக்கேஷ் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்துள்ள நிலையில் படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த படம் மார்ச் மாதம் 22 ஆம் தேதி வெளியாகும் நிலையில் இப்போது படத்தின் வெளிநாட்டு உரிமையை டெண்ட்கொட்டா நிறுவனம் மற்றும் சிம்பா புரொடக்‌ஷன்ஸ் ஆகியவை இணைந்து கைப்பற்றியுள்ளன.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!