Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விசுவாசத்தில் நயன்தாராவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விசுவாசத்தில் நயன்தாராவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
, புதன், 7 பிப்ரவரி 2018 (10:55 IST)
விசுவாசம் படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டுள்ளது என்று ஒரு தகவல் வெளியாகி பரவிக் கொண்டிருக்கிறது.
சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கும் படம் ‘விஸ்வாசம்’ படத்தின் ஹீரோயினாக நயன்தாரா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் இந்த நான்கு பேரைத் தவிர படம் சம்பந்தப்பட்டவர்களின் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்தது.
 
அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோலிவுட்டில் நயன்தாரா. முன்னணி நடிகை மட்டும்  அல்ல அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையும் அவர்தான். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர் அஜீத்தின் விசுவாசம் படத்தில் நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளார்.
 
இந்நிலையில் பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களில் சேர்ந்து நடித்த அஜீத்தும், நயன்தாரா ஜோடி மீண்டும் சேர்ந்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.  மேலும் இப்படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ. 5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கதாநாயகியை வைத்து ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்த சல்மான்கான்