Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யோகி பாபு ஒழுங்கா கால்ஷீட் கொடுத்தா சிஎஸ்கே டீம்ல சேத்துடலாம்… தோனி ஜாலி பேச்சு!

யோகி பாபு ஒழுங்கா கால்ஷீட் கொடுத்தா சிஎஸ்கே டீம்ல சேத்துடலாம்… தோனி ஜாலி பேச்சு!
, செவ்வாய், 11 ஜூலை 2023 (09:24 IST)
ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு நடித்துள்ள எல் ஜி எம் படததை தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்குகிறார்.இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் தோனி தன் மனைவி சாக்‌ஷியோடு கலந்துகொண்டார்.

விழாவில் நடிகர் யோகி பாபு பற்றி பேசிய தோனி “யோகி பாபுவுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருப்பது தெரியும். அவரை சிஎஸ்கே அணியில் சேர்க்க நான் நிர்வாகத்தோடு பேசத் தயார். ஆனால் அவர்களுக்கு ஒழுங்காக கால்ஷீட் கொடுத்து வந்து விளையாட வேண்டும். அதே போல பயிற்சிகளுக்கும் ஒழுங்காக வரவேண்டும். அதற்கு சம்மதம் என்றால் நான் சிஎஸ்கே நிர்வாகத்திடம் பேசுகிறேன்.” என  ஜாலியாக பேசினார்.

முன்னதாக தோனி தன்னுடைய கையெழுத்து போட்ட பேட்டை யோகி பாபுவுக்கு பரிசாக அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோசமான பிகினி போட்டோக்களை பகிர்ந்து நீக்கிய திஷா பட்டாணி!