Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறாரா தனுஷ்?

தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறாரா தனுஷ்?
, திங்கள், 26 மார்ச் 2018 (13:07 IST)
தெலுங்கில் ரீலீசாகி மாபெரும் வெற்றி பெற்ற ’நீடி நாடி ஒகே கதா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழ் சினமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பிசியாக வலம் வருகிறார் தனுஷ். இவர் தற்போது மாரி-2, வடசென்னை, என்னை நோக்கி பாயும் தோட்ட, ஃபகீர் என பல படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் எந்த படங்கள் முதலில் வெளிவரும் என தெரியவில்லை. மேலும், அவர் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி, நடிக்கவும் உள்ளார்.
webdunia
 
தனுஷ் அவ்வபோது ரீமேக் படங்களிலும் நடிப்பார். அவர் நடித்த யாரடி நீ மோகினி, உத்தமபுத்திரன், குட்டி உள்ளிட்ட படங்கள் தெலுங்கு படத்தின் ரீமேக்காகும்.
 
இந்நிலையில், தனுஷ் கடந்த மாதம் தெலுங்கில்  வெளியான ’நீடி நாடி ஒகே கதா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வியை மையப்படுத்தி அந்த படம் எடுக்கப்பட்டதால் அவர் இந்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார் என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காமெடி நடிகர் முனிஷ்காந்த் திருமணத்தில் ஒரு ஆச்சரியம்