Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாடா இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் ஜீவா… லேட்டஸ்ட் அப்டேட்!

டாடா இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் ஜீவா… லேட்டஸ்ட் அப்டேட்!
, சனி, 1 ஜூலை 2023 (07:50 IST)
கவின் நடிப்பில் இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து கவனம் பெற்ற நடிகைகளில் ஒருவரன அபர்ணாதாஸ் நடித்துள்ளார். படத்தை கணேஷ் கே பாபு இயக்கி இருந்தார்.

இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்ததை அடுத்து படத்தின் இயக்குனர் கணேஷ் பாபு அதிகம் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். அடுத்து அவர் துருவ் விக்ரம் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

அந்த படத்தை முடித்துவிட்டு அவர் ஜீவா நடிப்பில் வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. திறமையான நடிகர்களில் ஒருவரான ஜீவா, கடந்த சில ஆண்டுகளாக தோல்வி படங்களாக கொடுத்து தற்போது கைவசம் படங்கள் இல்லாமல் இருக்கிறார். அவருக்கு இந்த படம் கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

50 கோடி வசூலை எட்டிய போர் தொழில்.. வெற்றி விழா கொண்டாடிய படக்குழு!