Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பரமோஷன் ஷூட்டிங்கை முடித்த சீயான் 62 படக்குழு!

பரமோஷன் ஷூட்டிங்கை முடித்த சீயான் 62 படக்குழு!

vinoth

, செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (09:35 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம்மின் சமீபகாலமாக படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள தங்கலான் படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதற்கடுத்து விக்ரம், சமீபத்தில் சித்தா என்ற முக்கியமானப் படத்தைக் கொடுத்த இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.  இந்த படத்தை மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சிபு தமீம்ஸ் தயாரிக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் அறிமுக கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி கவனம் பெற்றது.

இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க எஸ் ஜே சூர்யா பிரபல மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சராமூடு ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். படத்தின் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர் ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் வெளியீடு ஒரு ப்ரமோஷன் வீடியோவோடு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதற்கான ஷூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாம். விரைவில் படத்தின் டைட்டில் வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ப்ளாக்பஸ்டர் ரொமான்ஸ் திரைப்படமான "பிரேமலு"டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங்