Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாபி சிம்ஹாவின் புதிய பட அறிவிப்பு!

பாபி சிம்ஹாவின் புதிய பட அறிவிப்பு!
, செவ்வாய், 5 ஜூன் 2018 (13:20 IST)
பாபி சிம்ஹா புதுமுக இயக்குனர்கள் ஜேபிஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கும் அக்னி தேவ் என்ற படத்தில் நடிக்கிறார்.
 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாபி சிம்ஹா. இதைத் தொடர்ந்து, இவர் உறுமீன், பெங்களுர் நாட்கள், கருப்பன் போன்ற படங்களில் நடித்தார். இவர் தற்போது விக்ரம் நடித்து வரும் சாமி 2 படத்தில் நடித்து வருகிறார்.
 
இந்த நிலையில் இவர் புதுமுக இயக்குனர்கள் ஜேபிஆர் மற்றும் ஷாம் சூர்யா இயக்கும் அக்னி தேவ் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.
webdunia
 
இப்படத்தில் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் ராஜேஷ் குமார் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட உள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லட்சுமி மேனன் படத்தின் ஷூட்டிங் மறுபடி தொடங்கியது