Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது ‘பிக் பாஸ்’ சீஸன் 2

விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது ‘பிக் பாஸ்’ சீஸன் 2
, சனி, 5 மே 2018 (16:51 IST)
தமிழ் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன், விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது.


 
விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் ஆரவ், ஓவியா, காயத்ரி ரகுராம், ஷக்தி வாசு, வையாபுரி, சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஜூலி உள்பட 19 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர். 100 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆரவ் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


webdunia

கடந்த வருடம் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸன், விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீஸனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கான புரமோஷன் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அனேகமாக ஜூன் 3ஆம் தேதி புரமோஷன் வெளியாகலாம் என்கிறார்கள்.

ஜூன் மூன்றாவது வாரத்தில் இருந்து இந்த நிகழ்ச்சி தொடங்கும் எனத் தகவல் கிடைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யிடம் கதை சொல்லிக் காத்திருக்கும் இயக்குநர்கள் யார் யார் தெரியுமா?